கும்பாபிஷேகம்

மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரளைக்கந்தன் வசந்தமண்டப கும்பாபிஷேகமும், கும்பாபிஷேக தின மணவாளக்கோல உற்சவம்: 03.04.2023 திங்கள் மாலை 6:15 - 8.30 வசந்தமண்டப கலச ஸ்தாபனம். 05.04.2023 புதன்கிழமை உத்திர நச்சத்திர பூரணதியும் கூடிய சுபதினத்தில் காலை 11:39 - 11:23 -குள் வசந்தமண்டப கும்பாபிஷேகம். 12:00 மணிக்கு 108 சங்காபிஷேக பூசையும், மலை 05:00 திருக்கல்யாணம் நடைபெற்று முருகன் வள்ளி தெய்வானை திருவீதியுலா வருவார்கள்
"அனைவரும் வருக வருக இறையருள் பெறுக" [மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகெமெல்லாம்] தர்மகர்த்தாவுடன் தொடர்பு கொள்ள 077 828 6664.

6/08/2018

தாளையடி வீதியில் மாசார் சோரான்பற்று எல்லைகளின் எழுந்தருளும் "மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலை கந்தன்"

       தகவல் பகிர்வு - MSMSKT INFO:   
____update: 12 December 2022____
அதிசயம் ஆனால் கந்தன் அற்புத திருவிளையாடல் - டிசெம்பர் 09,2022.
வங்காள விரிகுடாவில் பிறப்பமாகிய மாண்டஸ் சூறாவளி மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலை கந்தன் ´முற்றதினை மணித்தியாலயத்திற்கு 40 - 50 கிலோ மீற்றர் கதியில் தழுவி செல்கையில் ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்கு முன் குலதெய்வ ஆரம்பகர்த்தா திரு திருமதி தம்பையா முருகேசு,கந்தவனம் பூரணம் அவர்களினால் நாட்டிய மாமரமும், மடப்பள்ளிக்கு மேலோ அல்லது நீர்தாங்கி பேழைக்கு மேலோ விழுந்து சேதம் கொடுக்காது இடையில் வீழ்ந்ததே. ஓம் முருகா.
ஆலய தர்மகர்த்தா சபையின் குறிக்கோள்களில் கந்தன் முற்றத்தில் பசுமையான மரங்களினை முடியுமான அளவிற்கு பேணி காற்கும் முகமாக, இந்த மாமரம் வீதியுலா, சூரன்போர் நிகழ்வுகளில் சாதகமாக இல்லாதபோதும் இயலுமானவரையில் மரத்தினை அகற்றாது கார்த்து வருகையில், அடியார்களின் நலன் கருதி முருகனின் திருவிளையாடல் இதுவாகட்டும்.

_________________________-
கந்தசஷ்டி விரதம் அனுஷ்டித்து  முருகபெருமானை  வணங்கி  நன்மைகளும், மனதில் அனந்தமெய்க..  ஐப்பசி அமாவாசைக்கு மறுநாளில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்தசஷ்டி விரதம் மாஞ்சோலை கந்தன் அடியார்களின் நேர்த்திகடன்."முருகன் முற்றம் உங்கள் பாதமும் பதித்து மனதில் பேராறுதல் பெறுக"  


மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் முற்றத்து மங்ககனி வள்ளி தெய்வானையினர் போல காட்சி பகிரும் வேளையில்,ஆவணி கார்த்திகை சஷ்டி திதியில் 16/09/2022 காலை 06:03 தொடக்கம் 07:33 வரையுள்ள சுபநேரத்தில் மீதி கட்டிடத்திருப்பணி ஆலய நிர்வாக தலைமை திரு க.சதீஷ்கரன் கந்தன் அடியார்கள் சகிதம் அத்திவாரத்துடன் ஆரம்பம் (வசந்தமண்டப திருப்பணிகளுடன்).பிரதம பூசகர்: திரு சி. சின்னையா, திரு சி. சுந்தரலிங்கம் கட்டிட ஆச்சாரியார் திரு கு. ஐயாத்துரை. உங்கள் அனைவரின் ஆசிகளுடன் திருப்பணிகள் அடுத்தாண்டு திருவிழாவில்  முருகன் வசந்தமண்டபத்தில் காட்சி  கொடுத்து கோபுரத்தின் வழியே உலாவருவார். முருகன் முற்றம் உங்கள் பாதமும் பதித்து மனதில் பேராறுதல் பெறுக. ஓம் முருகா!

மாசார் சோரான்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் மலைக்கந்தன், முற்றத்து மங்ககனி வள்ளி தெய்வானையினர் போல காட்சி பகிரும் வேளையில், ஆவணி கார்த்திகை சஷ்டி திதியில் 16/09/2022 காலை 06:03 தொடக்கம் 07:33 வரையுள்ள சுபநேரத்தில் மீதி கட்டிட பணி அத்திவாரத்துடன் ஆரம்பம் (வசந்தமண்டப திருப்பணிகளுடன்).. இன்றைய ஆரம்ப திருப்பணியின் ஆவணபதிவு விரைவில் அகிலமெங்கும் அடியார்களுக்கு பகிரப்பட்டு, உங்கள் அனைவரின் ஆசிகளுடன் திருப்பணிகள் அடுத்தாண்டு திருவிழாவில் முருகன் வசந்தமண்டபத்தில் காட்சி
கொடுத்து கோபுரத்தின் வழியே உலாவருவார். முருகன் முற்றம் உங்கள் பாதமும் பதித்து மனதில் பேராறுதல் பெறுக. ஓம் முருகா
<------>

முருகன் முற்றம் உங்கள் பாதமும் பதித்து, மனதில் பேராறுதலும் சமத்துவமும் பெறுங்கள் அடியார்களே. 
கும்பாபிஷேக தின, மணவாளக்கோல, உற்சவ ஆரம்பம் - 18.03.2022
திருவருள்மிகு  ஸ்ரீ கதிரளைக்கந்தன் ஆலய  கும்பாபிஷேகதின மணவாளக்கோல  உற்சவம் - பங்குனி உத்திரம் 18 மார்ச் 2022
--------------------------
மாசார் சோரன்பற்று மாஞ்சோலை திருவருள்மிகு  ஸ்ரீ கதிரளைக்கந்தன் ஆலய  கும்பாபிஷேகதின மணவாளக்கோல  உற்சவம் - பங்குனி உத்திரம் 28 மார்ச் 2021
-------------------------------------
Kanthasahdy Viratha -2020 at MSMSKT
மாசார் சோறன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலயத்தில்  கந்தசஷ்டி பூசைகள் ஆரம்பம் 15 நவம்பர் 2020, சூரன்போர் 20 நவம்பர் 2020,  மாலை 5 மணிக்கு. திருக்கல்யாணம் வைபவ பூசை  21.11.2020 மாலை 5 மணிக்கும் இடம் பெறும்.
  தினமும் மாலை 4 மணிக்கு அபிஷேக கிரிகைகள் ஆரம்பமாகி, வசந்தமண்டப பூசைகளின் பின் மாலை  6 மணியளவில் முருப்பெருமான  உள்வீதி திருவுலா வரும் நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். 

https://youtu.be/ZBhLEzq8E58
ஓம் மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தா! 
ஆலய தகவல் பகிர்வு  ஒக்டோபர் ஈராயிரத்திருப்பது.
அடியார்களே! ஆலையத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற வைரவர், மயில், பலிபீடம், இரட்டை மணிக்கோபுரம் என்பவற்றின் மஹா கும்பாபிஷேகம் 17.10.2020(சனிக்கிழமை) நள்ளிரவு 8.00 மணிக்கு கிரிகைகள் ஆரம்பித்து,  18.10.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:10 மணி முதல் 11:00 மணிக்குள் நடைபெற்ற நிகழ்வின் பகிர்வினை மகேந்திரசிங்கம் சிவஐங்கரன்,தீபன் வசீகரன், சங்கவி - சதீஸிஸ் பதிவிகளிருந்து - உங்கள் பாதங்களும் முருகன் முற்றம் பதித்து மனதில் பேராறுதல் பெறுங்கள்.

பச்சிலைப்பள்ளி தாளையடி பிரதான வீதியில் மாசார் சோறன்பற்று கிராமத்தில், கந்தன் காட்சி  அருளும்  மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலயம், மூத்தோர் குலதெய்வ வழிபாடாக இருக்கையில், அவர்கள் மூத்த புதல்வன் பல ஆண்டுகள் கதிரமலை கந்தன் தலத்தில் திருப்பணிகள்  புரிந்து , தாய் முற்றம் வரும் போது  எடுத்து வரப்பட்ட  முருகவேல், இன்று ஆலய மூலஸ்தானத்தில் விருச்சங்களாக நிற்கும், நாவல்மர அடியோடடியாக  இரண்டு வேப்ப மரங்களின் அடியில் வைத்து வணங்கப்பட்டு  வருகையில்,  கந்தன் மூலாதார மூத்தோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈற்றில், இலங்கையில்  இடம்பெற்ற  இனயுத்த சூழலில் இறைப்பதம் பெற்ற நிலையில், கந்தன் கட்டிட திருப்பணிளினை பேரன் க. சதீஷ்காரனின் முழுத்திறன் செயல்பாட்டில், அத்திவாரம் யூன்  2018 -ல் இடப்பட்டு, கட்டிடமைப்பு திருப்பணிகள், கட்டிட ஆச்சாரியார்  திரு. கு. ஐயாத்துரை குழுவினர் துணைகொண்டு கந்தன் ஆலயம் அமைக்கப் பெற்று, மார்ச் 2019 -ல்  கும்பாபிஷகம் திருநிறைவாகியது.

ஆலய குடமுழக்கின் பின், இரண்டாம் கட்டிடத் திருப்பணிகள் யூலை 2019 -ல் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டதில் கந்தன் முகப்பு  முற்றத்தில் சமாந்திரம் பேணும் வகையில் இரட்டை மணிக்கோபுரங்கள்,மயில் பீடம் பலிபீடம், மகாமண்டபம், பரிபாரதெய்வ வைரவர் ஆலயம் அமைதல் முக்கிய திருப்பணிகளாகும். அனைத்து திருப்பணிகளும்  முதலாம் வருடாந்த ஆலய திருவிழாவுக்கு ஏதுவாக  ஆலய நிர்வாகம் திட்டம் போல  நிறைவு பெற்றிருந்தும், அவனியெங்கும் அல்லலினையும்,  செயல்பாடுகளினை முடக்கிய கோவிட்- 19 கொருநா வைரசு நிமித்தம், மணிக்கோபுர கும்பாபிஷேக பூசைகள் ஆறு மதங்களின் பின், 18 ஓக்டோபர் 2020-ல் திருநிறைவாகியது.

இரட்டை மணிக்கோபுரங்கள் கந்தன் முகப்பில் சமாந்திரம் பேணும்வகையோடு இணைத்து,  வள்ளி,தெய்வானையினர் கந்தனின் வலது இடப்புறங்களில் இருப்பது போலவும், கந்தன் மூலஸ்தானத்தில்  நாவல் விருச்சத்தின் இருபுறமும் நிற்கும் வேப்பமரம் விருச்சங்களினை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், ஆலயம் மாசார், சோறன்பற்று கிராமங்ககளில் எல்லைப்புறத்தில் அமைத்து இருப்பதும் கருத்தில் கொண்டு ஆலய நிர்வாகம் இரட்டை மணிக்கோபுரங்களினை நிர்மாணித்தார்.

கோபுரங்களுக்கான காண்டாமணிகள் Olsen Nauen Støperi நோர்வேயில் 175 ஆண்டுகள் காண்டாமணி  வார்ப்பில் பிரசித்திபெற்ற  மூன்றாம் தலைமுறையினரினால் வார்க்கப்ட்டு, மணிகளில் குலதெய்வ வாழிபாட்டு மூத்தோரின் நாமங்கள் நவம்பர் 2019-ல்   பொறிக்கப்பட்டது. காண்டாமணிளினை சரித்திர நினைவு பகிர்வின் நோக்காக,  நோர்வேயில் வார்பத்திற்கு ஆலய நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டிட திருப்பணியில் முழுமைத்திருப்பணிகளினையும்,  முதலாம் கட்டிட திருப்பணி பெயர் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு  கட்டிட கட்டமைப்பு, வருணம், சிற்பம், மின்னிணைப்பில் குறிப்பிடவர்களும்,  பருத்தித்துறை ஓவியக்கலை "ஹரன் ஆர்ட்", ஏனைய கந்தன் திருப்பணி அடியார்ககள் குறிப்பிடத்தக்கவர்கள். ஓம் முருகா!        
அவனியில் அனைவருக்கும் கந்த அருள் நினைந்து வணங்கி, அனைவர் உள்ளத்திலும் பீதிகள் அகழ்ந்து, மனதில் பேராறுதல் பெற்றிட கந்தனையம் வேண்டுவோம்.

உங்கள் பாதங்களினையும் கந்தன் முற்றம் பத்தித்து கண்ணிலும், செவிப்புலனிலும் இன்பத்தினை பெறுங்கள்.

ஓம் முருகா!
பச்சிலைப்பள்ளி 
மாசார் சோறன்பற்று
மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலை கந்தன் ஆலயம் 
மணிக்கோபுர கும்பாபிஷேகம்
அடியார்களே!
 ஆலையத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற வைரவர், மயில், பலிபீடம், 
இரட்டை மணிக்கோபுரம்  என்பவற்றின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 17.10.2020 (சனிக்கிழமை) நள்ளிரவு 8.00 மணிக்கு கிரிகைகள் ஆரம்பித்து, 
18.10.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:10 மணி முதல் 11:00 மணிக்குள்  நடைபெற முருகப்பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.
அடியார்கள் 18.10.2020 ஞாயிற்றுக்கிழமை  காலை  6:00 மணிமுதல்  8:00  மணிவரை எண்ணைக்காப்பு, பால்காப்பு சாந்தி வழிபடுவதோடு,  மஹா  கும்பாபிஷேகத்தினையும்  தரிசித்து குகன் அருளால்  குவலயத்தில் இன்புற்று வாழ்வீர்களாக.
" அனைவரும் வருக இறையருள் பெறுக"
< மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகெமெல்லாம் >
----------
மாசார் சோரன்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலய காண்டா மணிகள் விநாயகர் சதுர்த்தி 22 ஆகஸ்ட் 2020 -ல்  மணிக்கோபுரத்தில் ஏற்றி  பொருத்தப்பட்டுள்ளது. 
Masar Soranparru Mancholai Sri Kathiramalaikandan temple bells are installed in the bell tower on the Ganesha Chaturthi day  22nd August 2020.

மணிக்கோபுர, பரிபார வைரவர் ஆலய,  மகாமண்டப, பலிபீட குடமுழுக்கு பூசைகள் எதிர்வரும்   சில வாரங்களில் இணுவில் பாவா குருக்களினால்  திருநிறைவாகும். 

குடமுழுக்கு வைபவநல்நாள் விபரம் விரைவில் அறியதரப்படும் கந்தன் அருள்பிரகாரம்.


மாசார் சோரான்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் வள்ளி, தெய்வானை காண்டாமணிங்கள் நோர்வேயில் தமது பயணத்தினை 13.02.2020 -ல் கடல்மார்க்கமாக ஆரம்பித்து, கோவிட் 19 நிமித்தம் கால தாமதங்களினால் கொழும்பு கப்பல் துறை முகத்தினை 26.03.20 வந்தடைந்தனர். இக்காலப்பகுதி முழுமையான கோவிட் -19 பணி முடக்கம் உலகலாவின் நடைமுறையினால், 15.06.2020 வரைக்கும் வள்ளி, தெய்வானையினர் துறைமுகத்தில் தங்கி நின்று, இன்று (15.06.2020) பகல் 12 மணிக்கு க்ளோப்லிங் (Globelink Sri Lanka) / இலங்கை கப்பல்த்துறை முகாமை பணியாளர்கள் ஆலய முழுமை செயலாக்க திரு. கணேசலிங்கம் சதீஷ்கரனிடம் பாரம் செய்து, வள்ளி, தெய்வானையினர் மனோதாஸ் பாரவூர்தி ஏறி தரைவழி ஏறத்தாழ 6 மணித்தியாலங்கள் பயணம் செய்து இரவு 07:50pm மணிக்கு முருகன் முற்றம் வந்து சேர்ந்தனர்.

இந்த பணியில் முழுமை செயலாக்கம் திரு. கணேசலிங்கம் சதீஷ்கரனுக்கு தொலைத்தொடர்பு மூலம் ஆலோசனைகளினை இலங்கை சென்சிலுவை நிறுவன கணக்கியல் பொறுப்பாளர்களில் ஒருவரும் ஆலய உபதலைவர் திரு. மகேந்திரசிங்கம் சிவஐங்கரன், அத்துடன் செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் உதவி முகாமையாளர் நடராஜா ஜெயனன் கொழும்பில் அனைத்து நேரடி வழிகாட்டி திருப்பணிகளினை முருகனுக்கு அர்பணித்தனர்.🙏🙏
அது மட்டுமல்லாமல் அனைத்து அரச ஆவணங்களினையும் , கோறுனா கோவிட் -19 சார்ந்த காலதாமத பிரத்தியோக சிபாரிசுஉறுதி பத்திரங்களினை மாவட்ட செயலாளர், கிராமசேவகர் வழங்கி முருகனுக்கு திருச்சேவை புரிந்தனர்.
எங்கோ ஒரு சமூக சேவையில் விதாண்டாவாத கருத்துக்கள் முருகன் அடியார் காதில் கேட்ட போதும்.

மாசார் சோரான்பற்று மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் ஆலய பரிவார தெய்வம் வைரவர் ஆலயம், காண்டா மணிக்கோபுரங்கள், மயில், பலி பீடங்கள், முகப்பு மண்டபங்களுக்கான தூண்கள் அமைத்தல் திருப்பணி முதலாவது தொகுதியாக கும்பாபிஷேகத்தின் பின் 15 ஜூலை 2019-ல் ஆலய முதன்மை செயலாக்கம் திரு. க. சதீஷ்காரன் திருப்பணியில், கட்டிட/சிற்பாச்சாரியார் திரு கு. ஐயாத்துரை தலைமையில் ஆரம்பித்து திருநிறைவுபெறும் தருணத்தில்: வருணாச்சாரியார் கெருடாவில் சாவகச்சேரி திரு மு. சுரேஷ் குழுமத்தினர்களினால் கண்களினையும், மனதையும் மகிழ்வைக்கும் வர்ண ஓவியங்கள், சிற்பாச்சாரியார் அராலி மத்தி திரு ந. அற்புதராசா -ன் உளியினால் கற்களில் செதுக்கிய அற்புபுதம் பொழியும் கந்தன் ஆலய சிற்பங்கள், நோர்வே "உள்சன் நெளவன் மணிவார்ப்பு" ஆலையில் வார்க்கப்படட 145/85 கிலோ இடை கொண்ட காண்டாமணிகள் மும்மூர்த்திகளுக்கும் நிகரான கந்தன் முற்றத்தின் 2020-ம் ஆண்டின் மகிமை. திருப்பணிகள் நல்கும் அடியார்கள் அனைவருக்கும் கந்தன் அருள் என்றும் உண்டாகும். அகிலமெங்கும் அடியார்களுக்கு சுகநயம் பெற்று வாழ மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக்கந்தன் வரம் வேண்டி, உங்கள் பாதமும் கந்தன் முற்றம் மிதித்து மனதில் பேராறுதல் பெறுங்கள்.

Cobra laid eggs and waiting for babies at Masar Soranparru Manchcholai Kathiramalaikanthan.

மாசார்  சோரான்பற்று மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் ஆலயத்தின், அபூர்வம்??, அதிசயம்??,  புதுமை ??  திருத்தொண்டன் தீபன் அடியார் 26.01.2020 அன்று அடி மிதித்து அறிந்த உண்மை.  அகிலமெங்கும் அனைவருடனும் 02.02.2020 -ல் பதிவு செய்யப்படட ஒளிப்பதிவு.
மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் நாகம்மாள் முட்டைகளுடன் அடை காக்கின்றார் ஆலய களஞ்சியகுடிசையில். ஆலய திருத்தொண்டன் தீபன் கடந்த 26.01.2020 உறுதி செய்து. நாகாம்பாள் இரவு வேளைகளில் உணவிற்கு சென்று வருவதற்கான தடயங்களும் இருக்கும் இவ்வேளையில், இன்று 01.02.2020 ஆலய மிஞ்சார விளக்குகளினை ஒளி கொடுப்பத்திற்காக பக்தன் சென்ற போது குடிசைக்கு வெளியில் நாகாம்பாள் நின்று அதை அடியார் ராசன் அவர்களும் சென்று பார்வையிடடார்

இசைப்பிரியர்கள் மதிவண்ணன் குடும்பத்தினர் மாஞ்சோலை கதிராமலைக்கந்தன் முற்றம் பாதம் பதித்து தரிசனம்
நோர்வே வெண்பனிதிகழ் நிலத்திலிருந்து முதன்முதலாக 05 ஜூலை 2019 வெள்ளிக்கிழமை அபிஷேக பூசை ஆராதனையில் இசைப்பிரியர்கள் மதிவண்ணன் குடும்பத்தினர் மாஞ்சோலை கதிராமலைக்கந்தன் முற்றம் பாதம் பதித்து தரிசனம் செய்ததினை வரலாற்றில் பதிக்கின்றோம். 

 தேவாரம்: திருஞானக்குரல் திரு. பேரம்பலம் அவர்கள் - யாழ். கைதடி

ஒளிப்பதிவின் பின்னணி தேவகணம் நோர்வே அம்மரூட் முருகன் ஆலயம் 
இசையமைப்பு செல்வி மதிவண்ணன் கௌசியா நோர்வே ஒஸ்லோ.

ஓம் முருகா
மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் முற்றம் உங்கள் பாதம் பதித்து பேராறுதல் பெறுங்கள் 

காவல் தெய்வம் பைரவர் ஆலயதிற்கும், மணிக் கோபுரங்களுக்கான அத்திவாரமிடல், 15 ஜுலை 2019
மாசார் சோரான்பற்று மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் பரிவார காவல் தெய்வம் பைரவர் ஆலயதிற்கும், மணிக் கோபுரங்களுக்கான அத்திவாரமிடல், 15 ஜுலை 2019 -ல் இனிதே திருநிறைவு பெற்றது..

ஓம் முருகா அருள், அனைவருக்குமான வேண்டுதலுடன்.... 

எள்ளு கேட்டால் எள்ளெண்ணையுடன் வந்து நின்று, திருத்தொண்டு புரிய காத்திருக்கும் அடியார்கள், அத்திவார குழிபறித்தல், மாபெரும் மாங்கனி மரம் பெயற்கும் திருப்பணியினை நல்கிய அனைவருக்கும், முதற்கண் முருகன் அருளுண்டாகட்டும்.

பல்வேறு திருக்கோவில் கட்டிட பணிகள் மத்தியிலும், எம்மூர் முருகன் திருத்தலம் காலக்கிரமத்தில் ஒப்பேற்ற வேண்டுமென திருப்பணி நல்கும் திருக்கோவில் கட்டிடக்கலை ஆச்சாரியார் திரு. கு, ஐயாத்துரை அவர்கட்கும், அவர்தம் பணியாளர்களுக்கும் முருகன் நன்றிகடாச்சம் நலம் வேண்டியும்....

ஆகமவிதி நித்திய பூசைகளுடன், மணிக்கோபுரங்களுக்கான அத்திவாரக்கல் நடுகை ஆகமப்பூசையினை பூரணத்துவம் ஆக்கிய கோண்டாவில், பிரம்மஸ்ரீ ம. கிருஷ்ணமூர்த்தி சர்மா ஐயா அவர்களுக்கும் நன்றிச் சமர்ப்பணத்தோடு..

பலநாட்கள் பணியினையும் மிகவும் திட்டவட்டமாக நேரிய, சீரிய வகையில் இரண்டு நாட்களியே, பல்வேறுபட்ட பணிகள், சிரமங்களுக்கு மத்தியிலும் துல்லியமாக திருப்பணி புரிந்து, மணிக்கோபுரங்களுக்கான அத்திவார திருப்பணிகளினை திரு. க. சதீஸ்கரன் (மனோதாஸ் றில்லேர்ஸ்) உளமாற நிர்வாகத்தினை தொடர்கின்றார்.

மாஞ்சோலை கதிரைமலைக்கந்தன் திருத்தல கட்டுமான திருப்பணிகள் 01.ஜூன் 2018 -ல் ஆரம்பித்து முதற்கட்ட பணிகள் திருநிறைவு பெற்று, விளம்பி வருஷம் பங்குனி உத்திரம் பங்குனி 7-ம் நாள் (21/03/2019) காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்கு கும்பாபிஷேக ஆகம பூசைகள், ஆசீர்வாதம், ஆசியுரைகள் வரலாற்றுப் பதிவாகியது. ஆவணப் பதிவுகளினை இணைத்தளங்களில் தேடல் மூலம் பார்க்கலாம்.


கும்பாபிஷேக கட்டுமானங்களினைத் தொடர்ந்து இத் திட்டத்தில் முக்கிய திருப்பணிகளாக:
  • மணி கோபுரங்கள்,
  • பரிவார தெய்வம் பைரவர் ஆலயம்,
  • நந்தி பலிபீடம்
  • அலங்கார மண்டப தூண்கள் நிறுவல் முக்கிய திருப்பணிகளாகும்.

  • இவ் வரையறுக்க பட்ட திட்டமானது எதிர்வரும், முதலாம் ஆண்டு கந்தன் திருவிழாவின் ஒரு மாதகால எல்லைக்கு முன் நிறைவேற்றல் ஆகும்.

    அனைவருக்கும் முருகன் அருள் உண்டாகட்டும்
    உங்கள் பாதங்களும் முருகன் முற்றம் பதித்து, மனதில் பேராறுதல் பெறுங்கள். Masar Soranparru Manchcholai KathiramalaiKanthan Bell tower foundation stone laying 150719


    தாளையடி வீதியில், மாசார் சோரான்பற்று எல்லைகளில் எழுந்தருளம் "மாஞ்சோலை கதிரமலைக்கந்தன்" விரைவில் துல்லியமான ஒளி/ஒலி விபரங்களோடு கூடிய பதிவு இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்படும். - மாசார் சோரான்பற்று மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் கும்பாபிஷேக நிகழ்வுபற்றி. பிரஷ்டா பிரதம குரு: சிவஸ்ரீ குமார சரவணபவக் குருக்கள் ஜெ.பி -இணுவில் மங்கள இசை: உருத்திரமூர்த்தி (லவன்) குழுவினர் - சாவகச்சேரி பூமாலை அலங்காரம்: ஆர். ரவீந்திரன் - கச்சார்வெளி, பளை ஒலி, ஒளி அமைப்பு: கஜீபன் பிசாந் சவுண்ட் (ஜெகன்) - ஆழியவளை நித்திய பூசையை: பகல் 10.00 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12.00 மணிக்கும் நடைபெறும் ஆலய பூசகர்: சிவத்திரு சி. சுந்தரலிங்கம் ஆலய பரிபாலனம் தொ. இல.: 077 828664 மாசார் சோரான்பற்று மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் ஆலய முற்றம் உங்கள் பாதம் பதித்து மனதில் பேராறுதல் பெறுங்கள். ஓம் முருக

    கும்பாபிஷேக விசேட இணைய ஒலிபரப்பினை கேட்கலாம் (21/03-2019 11:30am - 12:30pm)
    Maha Kumbhabhushegam 21/03/2019
    Maha Kumbhabhishegam 21/03/2019 11:30am  - 12:30pm
    மஞ்சோலை கதிரமலைக்கந்தன் ஆலய கும்பாபிஷேகம் பங்குனி உத்திரம் 21 மார்ச் 2019 -ல்   இனிதே  திருநிறைவாகியது  பிரதம குருக்கள்  சிவஸ்ரீ பவா அவர்கள் தலைமையில்
    முழுவிபரம் அடங்கிய ஒளியொலி தாங்கிய ஆவணம் விரைவில் இணையத்தில்வெளியிடப்படும். உங்கள் அனைவருக்கும்  கந்தன் அருள் உண்டாகட்டும் - 22/03/2019



    மாஞ்சோலை கதிரமலைக்கந்தன் - மாசார் சோரான்பற்று 

    கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான ஆரம்ப கிரியை 18.03.2019 (பங்குனி திங்கள்)



    தாளையடி வீதியில் மாசார் சோரான்பற்று எல்லைகளில் எழுந்தருள இருக்கும் "மாஞ்சோலை  கதிரமலைக்கந்தன்"  ஆலயம் பங்குனி உத்திரம் 2019, வியாழக்கிழமை  பகல் 11:30 முதல் 12:30 மணிக்குள் மாஞ்சோலை ஸ்ரீ கதிரமலைக் கந்தன் மஹா கும்பாபிஷேகம். 



    கிரிகைகள் ஆரம்பம் 18/03/2019:
    • விளம்பி வருஷம் பங்குனி மதம் 4-ம் நாள் (18/03) காலை 6:30 மணி, மாலை 6:30 மணிக்கும்.
    • விளம்பி வருஷம் பங்குனி மதம் 5-ம் நாள் (19/03) காலை 8:30 மணி ( புண்ணியாக, ......., பிரசாதம் வழங்கள்) 
    • விளம்பி வருஷம் பங்குனி மதம் 6-ம் நாள் (20/03) காலை 7:00 மணி முதல் மாலை 4:00 வரைக்கும் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தல். மாலை 5:00 விசேஷ திரவிய ஹோம......  
    • விளம்பி வருஷம் பங்குனி மதம் 7-ம் நாள் (21/03) காலை 11:30 மணி முதல் 12:30 மணிக்கு  கும்பாபிஷேக ஆகம பூசைகள், ஆசீர்வாதம், ஆசியுரை.
    • மாலை 1:00 மணிக்கு  மகேஸ்வர  பூசை , அன்னதானம் வழங்கல்.

    நாவிற்கு  இனிய நாவலில் இருந்து, பாட்டி சுட்ட பழம் வேணுமா, சுடாத பழம் வேணுமா?  ஒளவைக்கு தமிழ் கற்றுக்கொடுத்த முருகா, மாஞ்சோலை கதிரமலைக் கந்தா, நாவல் அடியில் இருந்து அருள் கொடுப்பா அகிலமெங்கும்.

    மார்ச் ஆரம்ப வாரத்தில், கும்பாபிஷேக பலசரக்கு பொருட்கள் கொள்வனவு, ஆசனங்கள் வைத்தல், பாலஸ்த்தானம், ஆலயத்தின் ஏனைய முதற்கட்ட  கட்டிட திருப்பணிகள் அவற்றுள்  விநாயகருக்கான வாசல் மண்டபம், கந்தன் மஹா மண்டப நில வேலை,  காலைக்கடன் கூடம் அமைத்தல் உள்ளடங்கும். 



    தாளையடி வீதியில் மாசார் சோரான்பற்று எல்லைகளில் எழுந்தருள இருக்கும் "மாங்சோலை கதிரமலைக்கந்தன்" ஆலயம் இவ்வருடம் இளவேனிற்கால பங்குனி உத்தரம் - 21.03. 2019 முற்பகல் நல்நாளில் மஹா கும்பாபிசேகம் பிரதம குருக்கள் இணுவில் திரு பவா, அவர்களினால் நடை பெறுவதுக்கான ஆயத்தங்கள் நடைபெறும் இவ்வேளையில்,
    • வர்ணம் தீட்டுப் திருப்பணிகள் பூர்த்தி செய்தல்
    • ஆலய உள்வீதி,புறவீதி சுற்றாடல் செப்பனிடும் திருப்பணிகள் நடைப்பெடுக்கின்றன.
    கந்தன் ஆலயம் சற்று பள்ளத்தாக்கு நிலமாகையால் உள்வீதி சுற்றுமதில்கள் பதித்து, மணல்மண் நிரப்பி செப்பனிடல் இன்றியமையாததினால், 21, 22 பெப்ரவரி 2019 ஐந்து உளவு இயந்திரங்களும், மனோதஸ் நிறுவனத்தினரின் வாகனத்தினாலும் பல கனவளவு கொண்ட மணல்மண் மாசார் திரு. நீலனார் அவர்களின் வயல்நில மணல் திட்டியில் இருந்து திரு. அருள் அவர்களின் ஒப்பிதலில் எடுத்து வரப்பட்டு கந்தன் உள்வீதி சமாந்திரம் கொண்ட உயர்வான முற்றம் ஆக்கப்பட்டது. (நீலனார் குடும்பம், முருகேசு பூரணம் உடன் பிறவா சகோதரர்கள் இன்று அவர் நிலத்து மணல் கந்தன் முற்றம் பேணப்படுவது கந்தன் அருளே).
    தாளையடி வீதியில் மாசார் சோரான்பற்று எல்லைகளில்
    எழுந்தருள இருக்கும் "மாங்சோலை  கதிரமலை கந்தன்" 
    ஆலயம் இவ்வருடம் இளவேனிற் கோடைகால 
    இடைவெளிகளில் பங்குனி உத்தரம் - 2019
    நல்நாளில் கும்பாபிசேகம் நடை பெறுவதுக்கான
    பிரதம குருக்களாக இணுவில் பவா அவர்கள் இன்று  கந்தன் முற்றம் வந்து, கந்தன் பூசகர் திரு சி. சுந்தரலிங்கம் சகிதம்  ஆலயத்தினை பார்வையிட்டு ஆசீர்வாதமும், ஆலோயோசனைகளும் வழங்கி கும்பாபிசேக முக்கிய விசேடவிபரங்கள் அடங்கிய பிரசுர அழைப்பிதழினை  ழைப்பிதழினை  தயாரிப்பதுக்கும் ஒப்புதல் வழங்கிச் விடைபெற்றார்.
    ஓம் முருகா!


    Om Muruga
    மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தரம் - 2019
    மாசார் சோரான்பற்று 
    மஞ்சோலை  கதிரமலைக்கந்தன் ஆலயம்
    கிளிநொச்சி பளை 
    ஸ்ரீலங்கா


    මහා කුම්භඅභිෂේකම් -පාන්කුනි උත්තීරම් 2019
    මාසර් සොරනාපර්රු මන්චෝලයි මරුතමාලෙයි කාන්තන්
    කිලිනොච්චි, පලෙයි 
    ශ්‍රී ලංකා


    ஆகம கும்பாபிஷேக பூசையை ஆராதனை முழுமையான விபரங்கள் விரைவில் அன்பர்களுக்கு அறியத்தரப்படும் 
    இவ் சிறப்பு நல்நாளில் கந்தன் முற்றம் உங்கள் பாதம் பதித்து மனதில் பேராறுதல் பெறுங்கள்.

    Maha Kumbhabhishekam
    Pankuni Uththiram - 21/03/2019
    Masar Soranparru
    Mancholai Kathiramalaikanthan temple
    Kilinochchi Pallai
    Sri Lanka


    Complete details of the ritual worship of the Agama Kumbabishekas will soon be published here


    கண்டி - யாழ்ப்பாண பிரதான  நெடுஞ்சாலையுடன் இணையும் தாளையடி நெடுஞ்சாலைமாசார் சோரான்பற்று மாங்சோலை கதிரமலைக்கந்தன் ஆலயம் கண்டி வீதியிலிருந்து (புதுக்காட்டு சந்தி அல்லது சோரான்பற்று  சந்தி) 2 கி. மீ அருகாமையில் அமைந்துள்ளது.